New Year

50+ புத்தாண்டு வாழ்த்துக்கள், செய்திகள், தமிழில் மேற்கோள்கள் | 2025 New Year Wishes in Tamil

December 30, 2024
Happy New Year wishes in Tamil

2025 தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்கள் – Happy New Year Wishes, Greetings & Messages in Tamil

2024 ஆம் ஆண்டு நிறைவுபெற்றுள்ளது. எல்லா வருடமும் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி அன்று நாம் புது வருடத்தை வரவேற்கும் விதமாக புத்தாண்டை கொண்டாடி வருகிறோம்.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டை கொண்டாட நாம் தயாராக இருக்கிறோம். புத்தாண்டு அன்று நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்களை பகிர்ந்து புத்தாண்டை ஒன்றாக வரவேற்போம்.

புத்தாண்டை புது நம்பிக்கையோடும், புது உற்சாகத்தோடும் வரவேற்கும் விதமாக உங்களின் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உங்கள் நல்வாழ்த்துகளை பகிர இந்தக் குறிப்பு உங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்.

தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 – Happy New Year Wishes in Tamil 2025

  • இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில் இருள் விலகி, ஒளி பிறக்கட்டும். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் உள்ளத்தில் சந்தோஷம் மலரட்டும், உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறையட்டும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • இந்த புது வருடம் உங்கள் வாழ்வில் புது மகிழ்ச்சியை கொண்டுவரப்போகிறது. உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது. உங்கள் கனவு நனவாகப்போகிறது. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • உங்கள் வாழ்வு வெற்றி, வளம், அமைதி, நிம்மதி, மனநிறைவு நிரம்பியதாக மலரட்டும். இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த எல்லா காரியங்களும் நிறைவேறி, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் அழகாக ஒளிரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  • இந்த புத்தாண்டை உங்கள் வாழ்வை விட்டு துன்பங்கள் விலகட்டும், இன்பம் நிறையட்டும். நல்ல ஆரோக்கியத்தோடும், அளவில்லா செல்வ வளத்தோடும், புதிய நம்பிக்கையோடும் இந்த புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமையட்டும்.
  • சென்ற ஆண்டிற்கு நன்றி கூறிவிட்டு, புதிதாக பிறந்துள்ள இந்த புத்தாண்டை புது நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் வரவேற்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • இந்த புது தொடக்கம் உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகளையும், இன்பங்களையும் அள்ளித் தரட்டும். உங்களின் எல்லா ஆசைகளும் இந்த ஆண்டில் நிறைவேறட்டும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • இந்த புத்தாண்டு உங்களுக்கு தீரா சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறை செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் தரப்போகிறது. புது்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • இந்த புது வருடம் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தி, உங்களுக்கு ஒளிமயமான நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி அளிக்கட்டும். 2025 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையை ஒளிரச்செய்யும், நல்லதொரு தொடக்கத்தை கொடுப்பதாக இருக்கட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • உங்களின் எல்லா ஆசைகளும், கனவுகளும், இலட்சியங்களும் இந்த ஆண்டு நிறைவேறப்போகிறது. இருளை போக்கி ஒளிமயமாக உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

குடும்பத்திற்கான புத்தாண்டு வாழ்த்துகள் தமிழில் | New Year Messages for Family in Tamil

நம் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த தாய்மொழியை விட சிறந்த மொழி கிடையாது. எனவே தான் நம் தாய்மொழி தமிழில் உங்களின் அன்பான குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பகிர்வதற்கான சில அழகான புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். அன்பான உறவினர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூற மறந்துவிடாதீர்கள்.

  • ஒவ்வொரு புத்தாண்டையும் நம் குடும்பத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையாகவும் கொண்டாடுவோம். இந்த புத்தாண்டு மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • நம் இல்லம் எப்போதும் ஒளியும், மகிழ்ச்சியும் நிறைந்த இடமாக இருக்கட்டும். இந்த புத்தாண்டு நம் வாழ்வின் எல்லா இருளையும் அகற்றி, நம் இல்லத்தில் ஒளியை பரப்பட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • இந்த புத்தாண்டை நம் அன்பான குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடுவோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • உங்கள் குடும்பத்தில் சுபீட்சமும், மகிழ்ச்சியும் பெருகட்டும், உற்சாகம் பொங்கட்டும், செல்வம் பெருகட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், ஒளி மயமான எதிர்காலம் கிடைக்கட்டும். இந்த ஆண்டு உங்களுக்கு இனிமையான ஆண்டாக அமையட்டும்.
  • இந்த புத்தாண்டில் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அனைத்து வளங்களும், நல்வாழ்வும், நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • நம் இல்லத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளும் இன்றோடு முடிவுக்கு வரட்டும். இனி வாழ்க்கை இனிமையாக மாறட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • என் அன்பான குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையட்டும்.
  • இனிய நினைவுகளையும், மகிழ்ச்சியான நேரங்களையும் சுமந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. வரும் புதிய ஆண்டு மேலும் சிறப்பாக அமையட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • சொந்த பந்தங்களோடு சந்தோஷமாக புத்தாண்டை கொண்டாடுங்கள். குடும்ப உறவுகள் என்றென்றும் வாழ்வில் ஒளிரும் அழகிய நினைவுகளாய் நீடிக்க வாழ்த்துக்கள். 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நண்பர்களுக்கான புத்தாண்டு வாழ்த்துகள் தமிழில் |Tamil New Year Wishes for Friends

நட்பை விட அழகான உறவு ஏதேனும் உள்ளதா? அப்படிப்பட்ட உங்களின் ஆருயிர் நண்பர்களுக்கு இந்த புதிய வருடம் சிறப்பாக அமைய நீங்கள் வாழ்த்து கூற மறக்காதீர்கள். நண்பர்களோடு ஒற்றுமையாக இந்த புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள். உங்களின் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூற இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

  • என் அன்பான நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வு மிகவும் சிறப்பாகவும், சந்தோஷத்துடனும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
  • என் அன்பு நட்பே! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த புத்தாண்டில் உன் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
  • புது நம்பிக்கையோடு இந்த புத்தாண்டை தொடங்குங்கள். இந்த ஆண்டில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள் உயிர் நட்பே!
  • இத்தனை ஆண்டுகள் நாம் ஒற்றுமையாக பயணித்துவிட்டோம். இந்த 2025 ஆம் ஆண்டிலும் நம் நட்பு அதேபோல அழகாக தொடரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • சினேகிதனே, உன் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிரம்பி, ஒவ்வொரு நாளும் உன் கனவுகள் நனவாகட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா. என் ஆபத்துகளில் எனக்கான தோல் கொடுத்த தோழா உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன். உன் நட்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.
  • இரத்த சொந்தம் இல்லையென்றாலும் நீயும் என் உறவு தான் நட்பே. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா!
  • நண்பர்களோடு கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் மறக்கமுடியாத அழகான நினைவு தான். இந்த புத்தாண்டையும் நாம் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்வோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • என் வாழ்க்கையை அழகாக்கி, எனக்கு நம்பிக்கை தரும் நண்பர்களே. இந்த நன்நாளில் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இனிய 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • என் உயிர் நண்பா, இந்த புத்தாண்டு உன் வாழ்வில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும், வெற்றியும் கொண்டு வரட்டும். ஒவ்வொரு நாளும் உன் வாழ்க்கை அழகாக இருக்கட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

You Might Also Like

No Comments

Leave a Reply

IGP: Same Day Gift Delivery | Online Gifts Shop

error

Enjoy this blog? Please spread the word :)

Pinterest
LinkedIn
Share
WhatsApp